திருச்சி கள்ளிக்குடியில் புதிதாக கட்டப்பட்ட மத்திய வணிக வளாகம்: வெறிச்சோடி கிடக்கும் அவலம்:
அட நான் இப்ப கட்டின புது மார்க்கெட்டை சொன்னேன்! 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு ரூபாய் 75 கோடி செலவில் கட்டப்பட்டு எடப்பாடி பழனிச்சாமியால் 1வருடத்திற்கு முன் திறந்து வைக்கப்பட்ட திருச்சி காந்தி மார்க்கெட்டின் பரிதாப நிலை இது!
150 ஆண்டுகாலமாக திருச்சி மையப்பகுதி உள்ளது காந்தி மார்க்கெட்! திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கும் சத்திரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது திருச்சி காந்தி மார்க்கெட். இந்தவழியாகத்தான் அனைத்து பேருந்துகளும் செல்ல வேண்டும். இங்கு வரும் பேருந்துகள் வியாபார நோக்கை கருதி நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது . NSB ரோட்டில் பெரிய பெரிய துணிக்கடைகளும் தொழில் நிறுவனங்கள் உள்ளதால் அந்த சாலையும் வந்து மார்க்கெட்டில் தான் இணையும். எனவே மக்கள் கூட்டம் அலைமோதும்! இங்குள்ள சாலைகள் அனைத்தும் மிக குறுகலாகத்தான் இருக்கும்.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு 2014ஆம் ஆண்டில் திருச்சியிலிருந்து சுமார் பதினேழு கிலோமீட்டர்(17) தொலைவில் கள்ளிக்குடி என்ற ஊரின் மதுரை தேசிய நெடுஞ்சாலையில்(NH45B) அமைக்கப்பட்டுள்ளது!
முதல் கட்டமாக 300 கடைகளையும்,
பொருட்களை வைப்பதற்காக பெரிய பெரிய கிடங்குகளையும், வாகனங்கள் வந்து செல்வதற்காக பார்க்கிங் வசதிகளையும் செய்து தரப்பட்டுள்ளது. ஆனால் இது தமிழக முதலமைச்சர் திறக்கப்பட்டு 1 வருடங்கள் ஆன நிலையிலும் வெறிச்சோடி தான் கிடைக்கிறது!!
காரணத்தை கண்டறிய திருச்சி காந்தி மார்க்கெட் வணிகர்கள் சிலரிடம் கேட்டோம்!
“நாங்க வாழையடி வாழையாக இங்க தான் வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்கோம்.
இத விட்டுட்டு திடீர்னு போக சொன்ன நாங்க எங்க போவோம் “அதுமட்டுமில்லாம இங்குதான் யாபாரம் நல்லா இருக்கு. எல்லா மக்களுக்கும் எல்லா வகையான பொருட்கள் கிடைக்கறதால் எல்லாரும் இங்க வராங்க
என்கிறார் சரவணன்!
திருச்சியின் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த மேலும் திருச்சிக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது நம் திருச்சி காந்தி மார்கெட்! இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் வாழ்வாதாரமாக அமைந்துள்ளது திருச்சி காந்தி மார்க்கெட்!
பெரம்பலூர் அரியலூர் திண்டுக்கல் மணப்பாறை விராலிமலை புதுக்கோட்டை இலுப்பூர் போன்ற திருச்சி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அனைவரும் இந்த மார்க்கெட்டை நம்பி உள்ளனர் !
சோழர் காலத்தில் இருந்து இன்றளவும் காந்தி மார்க்கெட் என்று சொன்னால் அந்த பெருமை திருச்சிக்கு தான் சேரும்.
இது ஒருபுறமிருக்க உங்களுக்காகத்தான் இவ்வளவு பெரிய மார்க்கெட் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் ஏன் அங்கு செல்ல மாட்டீர்கள் என்று கேட்டபோது;
புது மார்க்கெட் அமைந்துள்ள பகுதியானது திருச்சியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாலும் அமைந்துள்ள இடம் வளைவான நெடுஞ்சாலை என்பதால் விபத்து பகுதி என்பதாலும்
நகர்ப்புறங்களில் இருக்கிறவர்கள் இவ்வளவு தூரம் வருவார்களா? என்பது சந்தேகம்தான்
மற்றும் மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து வசதிகள் கிடைக்குமா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றுதான்?
300 கடைகள் மட்டுமே உள்ள மார்க்கெட்டில் அனைவரும் வந்து வணிகம் செய்ய முடியுமா? அனைத்து மக்களும் இங்கு வருவார்களா ? என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்கிறார்கள் மார்க்கெட் பகுதியினர்!!
இதைப்பற்றி திருச்சி மாநகர காவல் துறையிடம் கேட்கும்போது;
“மார்க்கெட் வரும் லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் இரவு பத்து மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை தான் அனுமதி வழங்குகிறோம் ஆனால் ஒரு சில மணி நேரம் தாமதம் ஆவதால் மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்து இடையூறு அதிகமாக காணப்படுகிறது. இதனால் காலையில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் மற்றும் தொழிலகங்களுக்கு செல்லும் வேலையாட்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்கின்றனர்”
ஒருபுறம் மார்க்கெட் பகுதியினர் தங்கள் இடத்தை விட்டு வர முடியாது என்றும்
மற்றொரு புறம் அரசு 75 கோடியில் புதிய காந்தி மார்க்கெட் கட்டி காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது !!!
இதற்கு அரசு சார்பிலும் வணிகர்கள் சார்பிலும் முறையான பேச்சுவார்த்தை நடந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் !!!