திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கான கணித போட்டி அறிவிப்பு

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கான கணித போட்டி அறிவிப்பு

கணித மேதை சீனிவாச ராமானுஜன் 1887 ம் ஆண்டு டிசம்பர்.22ம் நாள் ஈரோட்டில் பிறந்தார். இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினம், தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படும் என 2011 ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தேசிய கணித தினமாக ராமானுஜரின் பிறந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கணிதமேதை ராமானுஜத்தின் 136 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணித போட்டிகள் நடைபெற உள்ளது. Mathwiz23 என்ற தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு புதிர் போட்டி, வினாடி வினா, கணித தேர்வு போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெல்லும் முதல் மூன்று நபர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision