தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் இலவசமாக கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசி - மாவட்ட தேர்தல் அதிகாரி

தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் இலவசமாக கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசி  - மாவட்ட தேர்தல் அதிகாரி

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்... கடந்த டிசம்பர் 2019 முதல் கோவிட்-19 பெருந்தொற்று நோய் உலக அளவில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  தமிழகத்தில் கடந்த வருடம் உச்சத்தில் இருந்த கொரோனா நோய்தொற்று பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக படிப்படியாக குறைந்த நிலையில் இருந்தது.  ஆனால் தற்போது தமிழகத்தில் கோவிட்-19 பெருந்தொற்று இரண்டாம் கட்டமாக வேகமாக பரவி வருகிறது.  

திருச்சி மாவட்டத்திலும் கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாம் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.  எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களும் கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு மத்திய, மாநில அரசு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியன தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  திருச்சி மாவட்டத்திலும் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மினி கிளினிக்குகளில் கோவிட்-19 தடுப்பூசியினை தேர்தல் பணியாளர்கள் இலவசமாக செலுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

வரும் 21.03.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி முகாமினையொட்டி கோவிட்-19 தடுப்பூசி வழங்கிடும் சிறப்பு முகாம் அனைத்து பயிற்சி மையங்களிலும் (9) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இம்முகாமில் தேர்தல் பணியாளர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டையினை காண்பித்து கோவிட்-19 தடுப்பூசியினை இலவசமாக செலுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.  

இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு அனைத்து நிலை தேர்தல் பணியாளர்களும் ஆதார் அட்டை நகலுடன் வருகைபுரிந்து தடுப்பூசி செலுத்தி கொண்டு கொரோனா நோய் பெருந்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU