திருச்சியில் சட்டத்திற்குப் புறம்பாக “நோ பார்க்கிங் போர்டுகள்” அதிகாரத்தை கையில் எடுக்கும் அதிகாரிகள்!
திருச்சி கண்டோன்மெண்டில் அலெக்சாண்ட்ரியா சாலையில் உள்ளது NCC அதிகாரிகள் உணவகம். அந்த உணவகத்திற்கு அருகே உள்ள சாலையில் யாருடைய அனுமதியும் இல்லாமல் “நோ பார்க்கிங்” போர்டுகள் வைத்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த அலெக்ஸாண்ட்ரியா சாலை ராயல் சாலை மற்றும் கன்டோன்மென்டில் உள்ள பென்வெல்ஸ் சாலையை இணைக்கிறது. சமீபத்தில், NCC அதிகாரிகள் உணவகத்திற்கு வெளியே அலெக்ஸாண்ட்ரியா சாலையில் காலியாக உள்ள இடத்தில் மெட்டல் கம்பிகள் கட்டப்பட்டு நோ பார்க்கிங் போர்டுகள் வைத்துள்ளனர். இது அவ்வழியே செல்லும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றன.போக்குவரத்து இல்லாத பொது வழியில் இதுபோல் இருப்பது சிரமம் தான்.
பொதுவாக மாநகராட்சி மற்றும் போக்குவரத்துத்துறை காவலர்கள் மட்டுமே இதுபோன்ற செயல்களை செய்ய முடியும்.மாநகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் தாங்கள் இதுபோல் எந்தவித அறிவிப்பும் கொடுக்கவில்லை. என்கின்றனர். “இந்த இடம் மற்ற நபர்களால் ஆக்கிரமிக்கபடுகிறது கார்கள் மற்றும் வண்டியை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர் என்றனர் NCC அதிகாரிகள்.
இதுபோல பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்வதற்கு அதற்கு பதிலாக அவர்களுடைய சுற்று சுவரை சற்று உயரமாக எழுதி இருக்கலாமே! நுகர்வோர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.