இரண்டு பிரபல எண்ணெய் கடை தற்காலிக நிறுத்தம் - அதிகாரிகள் நடவடிக்கை

இரண்டு பிரபல எண்ணெய் கடை தற்காலிக நிறுத்தம் - அதிகாரிகள் நடவடிக்கை

திருச்சி மேலப்புலிவார் ரோட்டில் உள்ள பிரபல இரண்டு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த வருடங்களிலிருந்து தொடர் ஆய்வுகளும் தொடர் உணவு மாதிரிகளும் எடுக்கப்பட்டு வந்தன. அதில் பல வழக்குகள் அந்த நிறுவனத்தின் மீது நடைபெற்று வருகிறது.

மேலும், நிறுவனத்தின் குறைகளை நிவர்த்தி செய்ய உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 55-இன் கீழ் தொடர்ந்து ஆறுமாத காலமாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டும் குறைகளை நிவர்த்தி செய்யாமல் இருந்து வருகின்றனர். மேலும், அந்நிறுவனம் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் (06.04.2023) அன்று தயாரிப்பு நிறுத்தம் நோட்டீஸ் (STOP SALE NOTICE ) கொடுக்கப்பட்டது.

பின்னர் அந்நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் அந்த நிறுவனத்தினர் சட்டத்திற்கு புறம்பாக பொய்யான தகவலை கொடுத்து உரிமம் பெற்றிருந்ததும் ஆய்வின்போது கண்டறியப்பட்டு உரிமம் ரத்து செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து மேலும் அவர்கள் தொடர்ச்சியாக எண்ணெய் தயாரித்து வந்தது தெரியவந்தது. உணவு பாதுகாப்பு துறையின் லேபில்லிங் மற்றும் தயாரிப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிப்ரியா உடனிருந்து ஆய்வு செய்ததில் முறையான உரிமம் இல்லாமலும் சுகாதாரமற்ற முறையிலும்

தயாரிப்பு இடங்களில் அசுத்தங்கள் மண் கழிவுகள், எலி மற்றும் கரப்பாண்பூச்சி வந்து செல்லும் வண்ணம் இருந்ததை அடுத்து தற்காலிக அவசர தடையாணை அறிவிப்பு மூலமாக அந்த நிறுவனதின் தயாரிப்பு மற்றும் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு சுமார் 4500 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு போடுவதற்காக நான்கு உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட நியமன அலுவலர் அவர்கள் கூறுகையில்.... இதுபோன்ற சரியான தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமலும், முறையான லேபில்லிங் இல்லாமலும் பாதுகாப்பற்ற மற்றும் சுகாதாரமற்ற முறையிலும் எண்ணெய் தயாரித்து தங்களது பகுதிகளில் காணப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.

புகார் எண் : 99 44 95 95 95 / 95 85 95 95 95 மாநில புகார் எண் : 9444042322

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn