திருச்சியில் 4 பேரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்

திருச்சியில் 4 பேரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் பயணித்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் ஒருவர் கேப்சூல் வடிவில் அடிவயிற்றுக்குள் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை அதிகாரிகள் உரிய மருத்துவ விசாரணை நடத்தி தங்கத்தை அகற்றினர். அப்போது அதில் ரூ. 64 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான ஆயிரத்து 25 கிராம் எடையுள்ள தங்கம் இருந்தது தெரிய வந்தது.

இதேபோல் துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரை அதே அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் அவர், 48.60 லட்சம் மதிப்புள்ள 772 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. தங்கம் கடத்தி வந்த இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.1.13 கோடி மதிப்புள்ள ஆயிரத்து 797 கிராம் தங்கம் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

துபாயிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளில், இரு பயணிகளின் உடைமைகள் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் விளையாட்டுப் பொருள்கள் அடங்கிய அட்டை பெட்டிகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து வைத்திருந்த சுங்கத்துறையினர், தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில், அட்டை பெட்டியிலும் மற்றும் விளையாட்டுப் பொருள்களை தனித்தனியாக வைத்திருந்த சிறு, சிறு அட்டைபெட்டிகளிலும்

உள்புறம் அமைக்கப்ப்ட்ட அடுக்குகளில் தங்கத்தை துகள்களாக்கி ஸ்பிரே செய்து ஒட்டி கடத்தி வந்தது தெரியவந்தது. அதில் மொத்தம் ஆயிரத்து 328 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 83.69 லட்சமாகும். இது தொடர்பாக அந்த பயணிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision