வீரனின் விழிகள் என்ற நூலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்
சுதந்திரப் போராட்ட மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மையப்படுத்தி இளம் எழுத்தாளர் ஹரிஷ் பிரபாகரன் எழுதிய வீரனின் விழிகள் என்ற நூலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டார்.
அதன் முதல் பிரதியை ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் வைத்தியநாதன் பெற்றுக்கொண்டார். உடன், எழுத்தாளரின் தந்தையும், திருச்சி மாநகராட்சியின் உதவி ஆணையருமான செ.பிரபாகரன், எழுத்தாளரின் அன்னை பி.தேன்மொழி, மனைவி அட்சய லட்சுமி ஹரிஷ்,
தம்பிகள் வாஞ்சிநாதன், விக்ரம், தில்லைகுமார் ஆகியோரும் உடன் இருந்தனர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை வைத்து வெளியாகும் முதல் தமிழ் புதினம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision