உலக வெறிநோய் தினம்

உலக வெறிநோய் தினம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக திருச்சி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில் அந்தநல்லூர் ஒன்றியம் முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் வெறி நாய்க் கடிக்கான தடுப்பு மருந்தை கண்டறிந்த லூயி பாய்ஸ்டியர் அவர்களின் பிறந்த தினம் உலக வெறிநோய் தினமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மாணவர்களுக்கு வெறிநோய்க்கடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முதலுதவி சிகிச்சை, மருத்துவ சிகிச்சைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர். பேராசிரியர் ஜெயலலிதா தலைமையில் மருத்துவர் பிரபா பிரியதர்ஷினி மேரி விளக்கி கூறினர்.

வட்டாரக் கல்வி அலுவலர்கள் மருதநாயகம், ஸ்டான்லி ராஜசேகர் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியர் சகாயமேரி சந்திரா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision