திருச்சியில் எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்

திருச்சியில் எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன் தொழிற்சங்கம் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன் சங்க மாநில தலைவர் கணேஷ் பேசும்பொழுது தங்களுடைய கோரிக்கைகளை முக்கியமாக முன்கள பணியாளர்களாக அறிவிக்கவேண்டும். இ.எஸ்.ஐ, பி எஃப் அதுமட்டுமில்லாமல் விபத்து காப்பீடு தங்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.

பத்து வருடங்களுக்கு முந்தைய சிலிண்டர்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது பலமுறை அரசுக்கு தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே தங்களுக்கு விபத்து காப்பீடு வழங்க வேண்டும்.
 கோவிட் பெருந்தொற்று காலத்திலும் அத்தியாவசிய தேவையான சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபடுவதால் எங்களை மத்திய, மாநில அரசுகள் எங்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டது.

இன்று சிலிண்டர் டெலிவரி பணி பாதிக்கப்படாது. தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறுவதால் அரை நாட்கள் டெலிவரி பணியில் ஈடுபடுவோம் எனவும் குறிப்பிட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC