திருச்சி தேர்தல் களத்தில் 2 அங்கீகார கட்சி வேட்பாளர்கள் மட்டுமே!

திருச்சி தேர்தல் களத்தில் 2 அங்கீகார கட்சி வேட்பாளர்கள் மட்டுமே!

நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, களத்தில் 35 வேட்பாளர்கள் உள்ளனர். திருச்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும் கூட்டம் தொகுதி தேர்தல் அலுவலரான கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடந்தது.

இதில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சி வேட்பாளர்களுக்கு அவர்களது கட்சி சின்ன மும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி அவர்கள் கோரிய சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில், சுயேச்சை வேட்பா ளர்கள் இருவரும் 'டார்ச் லைட்' சின்னம் கேட்டிருந்ததால், குலுக் கல் நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்பட்டவருக்கு அச்சின்னம் வழங்கப்பட்டது.

இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலின்படி, திருச்சி லோக்சபா தொகுதியில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி வேட்பாளர் ஒருவர், மாநிலக் கட்சி வேட்பாளர் ஒருவர். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி வேட்பாளர்கள் 7 பேர், 26 சுயேச்சை வேட்பா ளர்களும் களத்தில் உள்ளனர். அவர்களது விவரம், கட்சி மற்றும் சின்னங்கள் பின்வருமாறு:"

திருச்சியில் 4 துரை, 2 கருப்பையா : மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு, சுயேச்சை வேட்பாளர்களின் சின்னங்களின் பட்டியலில் இருந்து, அவர் கேட்டிருந்த தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. மேலும், துரை என்ற பெயரில் இருவரும், துரைராஜ் என்ற பெயரில் ஒருவரும் சுயேச்சை வேட்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் கருப்பையா பெயரிலும், சுயேச்சை வேட்பாளர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். திருவானைக்காவல் அடிமனை மீட்புக்குழு சார்பில் போட்டியிடும் அகிலாவுக்கு வளையல்கள் சின்னம், ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்னையை வலியுறுத்தி போட்டியிடும் கவிதாவுக்கு பேனா தாங்கி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision