அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து என்.ஆர்.சிவபதி தீவிர வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து  என்.ஆர்.சிவபதி தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியாவில் 18 வது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பையொட்டி இந்தியா முழுவதும் தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் பல்வேறு கட்சியினரால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை வரவேற்பதும் அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்வதும் சுறுசுறுப்படைந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் ஆதரவாக முன்னாள் அமைச்சரும், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளருமான என் ஆர் சிவபதி இன்று காலை 9 மணியளவில் நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டான பகுதியில் உள்ள கடை வீதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது என் ஆர் சிவபதி பேசும்போது.... திமுகவின் சர்வாதிகாரியாக நேரு இருந்து வருகிறார். தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டது. ஏழை எளிய பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப், பொங்கல் பரிசுத்தொகை, மேலும் பல திட்டங்களை முறியடித்தது திமுக ஆட்சியில் தான். மேலும் திமுக ஆட்சி காலாத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை . எனவே மீண்டும் நல்லாட்சி மலர அதிமுக ஆதரித்து பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் பிரசாரத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர்களும் வேட்பாளர் சந்திரமோகன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி உடன் இருந்தனர். 

இந்நிகழ்ச்சியில் மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன்,மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சண்முக வடிவேல்,மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வெற்றி செல்வி கவுன்சிலர் விமலா மணல் குணா செல்வி வெங்கடேஷ் ஒன்றிய செயலாளர் ஆதாளி தேமுதிக ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கமணி கட்சி நிர்வாகிகள்  ஏராளமான கலந்து கொண்டனர்..

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision