பாப்பம்மாள் அன்ன சத்திர முன்னாள் மாணவர்கள் கூட்டம்

பாப்பம்மாள் அன்ன சத்திர முன்னாள் மாணவர்கள் கூட்டம்

பாப்பம்மாள் அன்ன சத்திர முன்னாள் மாணவர்கள் கூட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள சுவை மினி கூட்ட அரங்கில் நடைபெற்றது. சுமார் 165 ஆண்டுகளுக்கு முன்பு தர்மவர்த்தினி பாப்பம்மாள் தனது சொத்துகளை வழிப்போக்கர்களுக்கு அன்னதானத்திற்காக தானம் செய்தார். இதனை வழிநடத்திய அறங்காவலர்கள் வெளியூரிலிருந்து திருச்சியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உண்ண உணவும், தங்க இடமும் நன்றாக படிக்கக்கூடிய ஏழை மாணவர்கள் பயன் பெரும் வகையில் செயல்படுத்தினர்.

இதன் அடிப்படையில் இந்த சத்திரம் கடந்த 165 ஆண்டுகளாக பல்லாயிர மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். விழாவில் பங்கு பெற்ற ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் செல்வராஜ் தலைமை உரை ஆற்றினார். தலைமை உரையில் இங்கு தங்கிப் படித்த மாணவர்கள் கல்வித்துறை, நிதித்துறை, நீதித்துறை, திரைப்படத்துறை, தொழில்துறை, கணினி துறையில் தொழிலாளராகவும், முதலாளியாகவும், உள்ளனர்.

இங்கு படித்த மாணவர்கள் நீதி அரசனாகவும், கலெக்டராகவும், ரயில்வே தலைமை, பொறுப்பாளராகவும், காவல்துறை அதிகாரியாகவும், போன்ற பல போன்ற பல உயர் பதவி உயர் பதவியில் பணியாற்றி வருகின்றனர் என்றார். மேலும் இந்தக் கூட்டம் வருடம் வருடம் செயல்பட வேண்டும். இந்த சத்திரத்தில் படித்த மாணவர்கள் கடமை உணர்வோடும், நல்ல பழக்க வழக்கங்கள் ஓடும், செயல்படுவார்கள் என்றார். இவ்விழாவில் சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.

கேப் ஜெமினி மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் விவேகானந்தன் கௌர உரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்வு ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொள்வதற்கு, பழைய நண்பர்களை பார்ப்பதற்கு, வேலைவாய்ப்பில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதற்கும், இந்த நிகழ்வு முத்தாய்ப்பாக அமையும் என்றார்.

இவ்விழாவில் திருமதி பாப்பம்மாள் அன்னச்சத்திர முன்னாள் அறங்காவலர் சோமசுந்தரம் கௌரவிக்கப்பட்டது. விழாவில் வரவேற்புரை எஸ்ஆர்எம் கல்லூரி தமிழ் துறை தலைவர் சக்திவேல் ஆற்றினார், திருச்சி தேசியக் கல்லூரி பேராசிரியர் நடராஜன் நன்றி உரை கூறினார். விழாவை சென்னை சென்னையை சேர்ந்த சிவச்சந்திரன், கர்ணன், வக்கீல் சரவணன் மற்றும் ஜெகதீஷ் ஒருங்கிணைத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn