கோவில் செயல் அலுவலரை தாக்கிய பண்டக காப்பாளர் - பரபரப்பு

கோவில் செயல் அலுவலரை தாக்கிய பண்டக காப்பாளர் - பரபரப்பு

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே திருநாராயணபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த வேத நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் செயல் அலுவலராக ஜெயா பணியாற்றி வந்தார். தற்போது பணி மாறுதலில் புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலுக்கு  செல்ல உள்ளார்.

இதனால் வேத நாராயண பெருமாள் கோவில் பொறுப்புகளை ஒப்படைப்பதற்காக கோவில் பண்டக காப்பாளர் பாலசுப்ரமணியனிடம் லாக்கர் சாவியை கேட்டுள்ளார். ஆனால் லாக்கர் சாவியை தர மறுத்த பண்டகக் காப்பாளர் பாலசுப்பிரமணியன், அவரது மகன் ராஜேஸ், தம்பி முருகவேல் ஆகியோர் சேர்ந்து செயல் அலுவலர் ஜெயாவை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்தும், கோவில் சாவியை அவர் மீது தூக்கி வீசியதில் காயமடைந்தார்.

இதையடுத்து காயமடைந்த செயல்அலுவலர் ஜெயா தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அறநிலைத் துறையை சேர்ந்த செயல் அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் சக அலுவலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH#

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO