ஜெய் பீம் படத்தில் ஒரு பொம்மைக்காக அரசியலில் இல்லாதவர்கள் மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் இருக்க போராட்டம் என பாரிவேந்தர் எம்.பி பேட்டி

ஜெய் பீம் படத்தில் ஒரு பொம்மைக்காக அரசியலில் இல்லாதவர்கள் மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் இருக்க போராட்டம் என பாரிவேந்தர் எம்.பி பேட்டி

திருக்கோயில்கள் புனரமைப்பு, புது ஆலயங்கள் கட்ட பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் தனது சொந்த பணத்தில் மூலம் வாளாடி சிவன் கோவில் புனரமைக்க 10 லட்சம், கல்லக்குடி சிவன் கோவிலுக்கு 40 லட்சம் செலவில் ராஜகோபுரம், செம்பரை லெட்சுமி நாராயணன் கோவிலுக்கு 50 ஆயிரம், நாச்சியாண்டார் திருமலை கோவில் தேர் பணிக்கு 5 லட்சம்,  தூய சவேரியார் தேவாலயத்துக்கு 3.5 லட்சம், இருங்களூர் தோமையார் ஆலயத்துக்கு 3 லட்சம், மறைந்த ராணுவ வீரர் தேவானந்த் குடும்பத்திற்கு
 ஒரு லட்சம் என 67 லட்சம் வழங்கினார். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய  பாரிவேந்தர் எம்பி கூறுகையில்...


தமிழ்நாடு மாநிலம் என்பது இறைவன் இல்லை கடவுள் இல்லை என்று பயிற்றுவிக்கப்பட்டு, சில பேரால் பின்பற்றப்பட்டு காலத்தின் கோலத்தால் பிரச்சாரத்தை செய்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதனை மறந்து ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் இறைவனை நேசிக்க வேண்டும் போற்றவேண்டும் அத்தகைய உணர்வு மக்களுக்கு வந்து கொண்டிருக்கிறது, அதனை நாமும் பின்பற்றாவிட்டால் திராவிட மக்கள் கூட கடவுள் இருக்கிறார் என்று பின்பற்றிவருகின்றனர்.அரசியல் கட்சியினரும், தலைவர்களும் மற்றும் அந்த குடும்பமும் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும், அரசு பணிகள் அனைத்தும் காண்ட்ராக்ட் மூலமாக செயல்படுத்தப்படும்பட்சத்தில் அமைச்சர்கள், அரசியல்வாதிகளாலேயே  காண்ட்ராக்ட்டர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். வேலை செய்வோருக்கு லாபம் வேண்டும் என்ற பட்சத்தில் அளவோடு பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்களும்,ஆட்சி செய்பவர்கள் ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரட்டை குழந்தைகள், கான்ட்ராக்ட் மூலம் பெரும் தொகையை பெறுகிறார்கள். அரசியல்வாதிகள் உண்மையானவர்களாக, நல்லவர்களாக இருந்தாலும் பணம் கொடுத்து ஆட்சிக்கு வர மனப்பான்மை இருக்கும் வரை திருத்த முடியாது. தவறு செய்பவர்கள் ஒரு காலத்தில் போய்த்தான் ஆக வேண்டும், தேர்தலில் நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் மாற்றம் வரவேண்டும், தூய்மையான அரசியல்வாதிகள் வரவேண்டும், நான் அரசியலுக்குள் தெரியாமல் வந்து விட்டேன். தமிழ்நாட்டில் அரசியலில் மிகப் பெரிய மாற்றம் வரவேண்டும்.

ஒரு கட்சி, ஒரு குடும்பம் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது ஜனநாயகம் ஆகாது, எல்லாருக்கும் வாய்ப்புகள் கிடைத்தால் தான் ஜனநாயகம் ஆகும்.கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து நிற்க வேண்டும் என நினைத்திருந்தோம், வரும் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி தனித்து நிற்கும். நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யாதது குறித்து அரசுக்கு கடிதம் எழுதி கொள்முதல் செய்ய ஆவன செய்யப்படும். 

திமுகவுடன் நட்பும் இல்லை, தொடர்பும் இல்லை, எதிர்ப்பும் இல்லை என்றார். குறை சொல்வதன் மூலம்  அச்சமயத்தில் மக்கள் மத்தியில் வெளிச்சம் வேண்டும் என்பதற்காக கூறுகிறார்கள். ஜெய் பீம் படம் எடுத்ததில் ஒரு பொம்மை இருப்பதற்காக போராட்டம், ஆர்பாட்டம் நடத்துகிறார்கள், அரசியலில் வேலை இல்லாததால் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார்கள், அரசியலில் இல்லாதபட்சத்தில் மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் இருப்பதற்காக இது போன்ற நிகழ்வுகளை மேற்கொள்கிறார்கள்.

தனி மனித உரிமையில் தலையிட இவர்கள் யார்? இறுதியில் பணத்தைப் பிரதானமாக வைக்கிறார்கள், இது புதிதல்ல ஏற்கனவே பாபா படத்திற்கும் இதனை செய்துள்ளனர். தங்களது இருப்பை தெரிவித்துக் கொள்ளவும், பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் அடிக்கடி வரவேண்டும் என்பதற்காக மூட்டி விடுகின்றனர். இதனால் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை அவர்கள் தொழிலை அவர்கள் செய்கிறார்கள், பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டு போகலாம் அதை எனது கருத்து சொல்லலாம் அதை தவிர்த்து இது இவ்வாறு செய்வது சரியில்லை என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn