திமுக, விசிக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு - மத கலவரத்தை தூண்டுவதாக புகார்

திமுக, விசிக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு - மத கலவரத்தை தூண்டுவதாக புகார்

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும்தொல். திருமாவளவனையும், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அருண் நேருவையும், 

தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கற்பகத்திடம் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அழுத்துள்ளனர்.

இந்து மக்கள் கட்சியினர் அதன் மாநில பொதுச் செயலாளர் பாரதமாதா செந்தில் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கற்பகத்திடம் இன்று மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து,

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், கடந்த 6ஆம் தேதி, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, மோடி மீண்டும் பிரதமர் ஆனால், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை! தேவாலயங்களும், மசூதிகளும் இடிக்கப்படும் எனவும் குர்ஆனையும், பைபிளையும் கொளுத்துவார்கள் என மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதால், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், தொல். திருமாவளவன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அருண்நேரு ஆகியோர் மீது, எதிர்ப்பாளர்களின் நன்னடத்தையையும் குணாதிசயங்களையும் அவதூறாக கெடுக்கும் வண்ணம் பேசியதாகவும், தேர்தல் முடிவுகளை சூழ்ச்சியாக தன் பக்கம் இழுக்க முயற்சித்ததற்காகவும் இது பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதை காட்டிலும் மிக பெரிய கொடிய நிகழ்வாக கருதப்படுவதால் இபிகோ 171ஜீ மற்றும் இபிகோ 123(3ஏ) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வது இருவரையும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான க.கற்பகத்திடம் மனு அளித்துள்ளதாகவும் அதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கலந்து பேசி வீடியோ ஆதாரங்களை பரிசோதித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். 

நட்சத்திர வேட்பாளரான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அமைச்சர் நேருவின் மகனான அருண் நேரு ஆகியோரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் மனு அளித்திருப்பது, வேட்பாளர்கள் உள்ளிட்ட அவர்களது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.