சாலை, சாக்கடை, தெருவிளக்கு வசதிகளை செய்து தரக்கோரி மனு

சாலை, சாக்கடை, தெருவிளக்கு வசதிகளை செய்து தரக்கோரி மனு

மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் சார்பில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்குறிச்சி ஊராட்சிக்கு கட்டுப்பட்ட மகாசக்தி நகருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கப்பி சாலை அமைக்க ரூ. 7 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 15 வருடங்களாக சாலை வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்த மக்களுக்கு கப்பி சாலை அமைப்பதை தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.

இதே போல் அப்பகுதியில் சாக்கடை வசதி இல்லாமல் கழிவுநீரை தெருவில் விடும் சூழ்நிலையில் மக்கள் வசித்து வருகிறார்கள். இதனால் மழைகாலங்களில் டெங்கு மற்றம் வைரல் காய்ச்சல் பரவும் சூழ்நலை உருவாகி வருகிறது.

ஆகவே, மேற்கண்ட கோரிக்கை மனு மீதுநடவடிக்கை எடுத்து மகாசக்தி நகர் மக்களுக்கு சாக்கடை வசதி செய்து தருமாறு திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை பற்றிய சிறப்பு கிராம சபை கூட்டம் வாயிலாக மக்கள் சமூக பாதுகாப்பு சங்கத்தின் சார்பாகவும் மகாசக்தி நகர் மக்கள் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.

மகாசக்தி நகர் மற்றும் குறுக்குத் தெருக்களில் மின் விளக்கு இல்லாமல் வசித்து வருகிறார்கள். இதனால் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் வீட்டில் வந்து விடுகிறது. கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுத்து மக்களின் அடிப்படை உரிமையான தெரு மின்விளக்கு மற்றும் 5 குறுக்கு தெருக்களுக்கும் அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision