விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும் என நினைத்தாலும் 16 மணி நேரம் தான் விநியோகம் மின்வாரிய அதிகாரி பேச்சு

விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும் என நினைத்தாலும் 16 மணி நேரம் தான் விநியோகம் மின்வாரிய அதிகாரி பேச்சு

மத்திய திறனூக்கச் செயலகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் இணைந்து விவசாயிகளுக்கான மின் சிக்கனம் மற்றும் மின் திறன் மற்றும் மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சியினை திருச்சி மண்ணார்புரம் மின்வாரிய தலைமை செயற்பொறியாளர் அலுவலகத்தில் 2 நாட்கள் (30,31) நடைபெறுகிறது.

மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் பிரகாசம் முன்னிலையில், தலைமை பொறியாளர் செடியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பயிற்சி முகாமில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் பஞ்சாயத்து பிரதிநிதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் மத்திய - மாநில அரசுகளின் விவசாயிகளுக்கான திட்டங்கள் மானியங்கள் குறித்தும், மின் மோட்டாரை பாதுகாப்பாக இயக்குவது, மின் சிக்கனம் குறித்தும் மற்றும் மின் உயிரிழப்புகளை தவிர்ப்பது குறித்தும் விளக்கப்பட்டது. நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் இருந்த போதிலும் விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும் என நினைத்தாலும் மின் உற்பத்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் 15 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரையிலும் விநியோகம் வழங்கப்படுகிறது.

இதனை சரியான முறையில் விவசாயிகள் பயன்படுத்தி விவசாயத்தையும் நாட்டையும் வளம் பெற செய்ய வேண்டும், அதேநேரம் பாதுகாப்பான முறையில் மின்சாதனங்களை மற்றும் மின்சாரத்தை கையாள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision