நெற்பயிரில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்.

நெற்பயிரில் கடைப்பிடிக்க வேண்டிய  தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தில், நெற்பயிரில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் செய்து காட்டினர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தில்உர பெரம்பலூரில் இருந்து கிராம வேளாண் பணி அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் வந்துள்ள மாணவிகள் நெற்பயிரில் உழவில்லா உழவு, கோனோவீடர் பயன்படுத்தும் முறை மற்றும் மண் பரிசோதனையின் மூலம் உரம் மேலாண்மை போன்ற செயல்பாடுகளை செயல்முறைகளை செய்து காட்டி விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினர். இதில் வேளாண்மை துறை திட்டங்கள் குறித்து மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் உரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் கல்லூரி மாணவிகள் திவ்ய ரேச்சல், ஹெர்லின், இஷ்ரத் ரிகானா, ஜனனி, ஜெயந்திகா, ஜெனோ வெர்ஜின், ஜனனி மற்றும் ஜோதி முகுந்தா ஆகியோர் கொண்ட குழு மாணவிகள் நடத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision