மலைக்கோட்டை மாநகரை குளிர்ச்சியாக்கிய மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி 

மலைக்கோட்டை மாநகரை குளிர்ச்சியாக்கிய மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி 

மலைக்கோட்டை மாநகரை குளிர்ச்சியாக்கிய மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி . வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

கோடை வெயில் தொடங்கி பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் தற்போது திடீரென திருச்சி மாநகரில் பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ,காந்தி மார்க்கெட் ,பால்பண்ணை ,மத்திய பேருந்து நிலையம் உறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகர் பகுதிகளில் மண்ணச்சநல்லூர் லால்குடி திருவரம்பூர் போன்ற பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைக்கோட்டை மாநகரின் முக்கிய பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதை காண முடிந்தது. இரண்டு நாட்களாக கடுமையான வெப்பத்திற்கு இந்த மழை பெய்ததால் பூமி குளிர்ந்ததை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

 திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision