சாரண - சாரணியரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாரண - சாரணியரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

டாக்டர் ராஜன் நகராட்சி நடுநிலைப்பள்ளியின் பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்வியாளர் எஸ்.சிவகுமார் கொடி அசைத்துப் பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணிக்கு பாரத சாரண சாரணிய இயக்க தமிழ்நாடு மாநில துணை ஆணையர் மருதநாயகம் தலைமை தாங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஜவகர், ராதா, செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்த பேரணியில் சாரணர்கள் 20 பேர், சாரணியர்கள் 23 பேர், குருளையர்கள் 28 பேர், நீல பறவையர் 28 பேர், மொத்தம் 108 பேர் பங்கு பெற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் லில்லி புளோரா வரவேற்புரை ஆற்றினார். சாரண ஆசிரியர்கள் வரதராஜன், செந்தில்குமார், ஆகியோர் மாணவர்களுக்கு அணி நடை பயிற்சி வழங்கினர்.

இந்த பேரணிக்கு அனைத்து ஏற்பாடுகளையும் சாரணப் பயிற்சியாளர் இளம்வழுதி செய்திருந்தார். பேரணி ராஜன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தொடங்கி, சித்திர வீதி வெள்ளகோபுரம் வழியாக சென்று மீண்டும் பள்ளி வந்து அடைந்தனர். பள்ளி ஆசிரியை லட்சுமி நன்றி உரையாற்றினார். "படியில் பயணம் நொடியில் மரணம்", "தலைக்கவசம் உயிர்க்கவசம்" ஆகிய விழிப்புணர்வு கோஷங்களை மாணவர்கள் பேரணியில் எழுப்பி சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision