ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய் குழு எஸ்.பி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் -பிரமாண பத்திரம் தாக்கல்
திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்ற போது கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் உடல் கண்டுடெடுக்கப்பட்டது.
ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 01.11. 2022-ம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் 6ல் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிபதியிடம் அனுமதி பெற 13 ரவுடிகள் ஆஜர்படுத்தபட்டனர். அவர்கள்(ரவுடிகள்) தரப்பு வழக்கறிஞர் முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்று வாதத்தை முன் வைத்தார்.முக்கியமாக சிறப்பு புலனாய்வு குழு எஸ்பி நேரில் ஆஜராகி அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று வேண்டுமென கடந்த 01.11.2022ம் தேதி அன்று நீதிபதி சிவக்குமாரிடம் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை மாற்றி வைக்கப்பட்ட நிலையில் சிறப்பு புலனாய்வு குழு எஸ்பி ஜெயக்குமார், துணை கண்காணிப்பாளர் மதன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இன்று (07.11.2022) 13 பேரில் ( லெப்ட் செந்தில்) கடலூர் மத்திய சிறையில் உள்ளார். மீதமுள்ள 12 பேரில் சாமி ரவி, மாரிமுத்து, சீர்காழி சத்தியராஜ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சிவ குணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 8 பேர் நீதிமன்றத்திற்க்கு வந்தனர்.
(பாலிகிராப் சோதனை)உண்மை கண்டறியும் சோதனை எந்த வகையில் நடத்த போய்கிறார்கள்(SIT),என்ன கேள்விகள் என்பதை ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து ரவுடிகள் தரப்பு வழக்கறிஞர் வாதமிட்டனர்..அனைத்து ரவுடிகளும் தங்களது வழக்கறிஞர் மூலம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சம்மதமா இல்லையா என்பதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.இரண்டு தரப்பு வாதங்களையும் நீதிபதி சிவக்குமார் கேட்ட பிறகு வழக்கு விசாரணையை 14.11.2022ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
ரவுடிகள் தரப்பில் சத்யராஜ் வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகர் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது இந்த 13 பேரை குறிப்பிட்டு உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது ஏன் என்ற கேள்வியை எழுப்பி உள்ளார். அதற்கான எந்த விதமான ஆவணங்களும் இல்லை என குறிப்பிட்டார். 50 லட்ச ரூபாய் குற்றவாளியை கண்டுபிடிக்க அறிவித்தது ஏன்? முக்கியமான வழக்குகளில் இது போன்ற அறிவிப்புகள் வெளிவரவில்லை என்ற கேள்வியும் அலெக்சிஸ் செய்தியாளர்களிடம் கேட்டார்.
சிறப்பு புலனாய்வு குழு எஸ் பி ஜெயக்குமார் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்த போது... உண்மை கண்டறியும் சோதனை முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யவில்லை என்ற எதிர் தரப்பு வாதத்திற்கு.. பதிலளித்த எஸ்.பி
முறையான ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளோம் . வழக்கறிஞர்கள் பொய் சொல்கிறார்கள்.சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த மனுவை நீதிபதி சிவக்குமார் ஏற்றுக்கொண்டார்.
13 பேரின் சம்மத ஆவணங்கள் தாக்கல் செய்வது வருகிற 14ஆம் தேதி அன்று தெரியவரும் என்றார்.