திருச்சி அருகே பள்ளம் தோன்டிய போது சாமி சிலைகள் கண்டெடுப்பு

திருச்சி அருகே பள்ளம் தோன்டிய போது சாமி சிலைகள் கண்டெடுப்பு

திருச்சி மாவட்டம் புலிவலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோட்டாத்தூர் பகுதியில் தனியார் நிறுவனம் சூரிய ஒளியினால் மின்சாரம் தயாரித்து வருகிறது.

அதனை தொடர்ந்து இன்று அதற்காக பணிகளை மேற்கொள்வதற்காக பூமியை தோன்டியபோது கடப்பாரையில் கற்கள் மீது மோதும் சத்தம் ஏற்படவே (ஏதோ தட்டுப்பட்டதை தொடர்ந்து) அங்குள்ளவர்கள் பார்த்தபோது அது கற்களால் ஆன விஷ்ணு மற்றும் லட்சுமி சிலைகள் இருப்பதை கண்டு ஆச்சிரியம் அடைந்தனர். 

இதனைத் தொடர்ந்து தனியார் சூரிய மின்சக்தி நிறுவன ஊழியர்கள் துறையூர் வட்டாட்சியரிடம் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் வட்டாட்சியர் மோகன் சிலைகளை ஆய்வு செய்ததோடு அதனை பத்திரமாக மீட்டு துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் கொண்டு வந்து வைத்தனர்.

பூமியில் இருந்து சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision