ஆர்.நல்லகண்ணு பேருந்து நிறுத்தம் (RNK) என்று பெயர் மாற்ற கவுன்சிலர் கோரிக்கை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான தோழர்.இரா.நல்லகண்ணு அவர்களின் நுாற்றாண்டு பிறந்தநாள் விழாவில் 2024, டிச.26ல் தமிழ்நாடு முதல்வர் நேரில் பங்கேற்றார். அமைச்சர் பெருமக்கள், அனைத்து அரசியல் இயக்கங்களின் தலைவர்களின் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்கள்.
சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும், சமத்துவ சமுதாயம் அமைக்கவும், பாடுபட்டவர். போராட்டம், தொண்டு, பொதுநலன் இதுவே தோழர்.ஆர்.நல்லக்கண்ணு அவர்களின் நூற்றாண்டு கால வாழ்க்கை பக்கங்களின் நிறைந்திருக்கும் சரிதம். எளிமையான வாழ்வுக்கு சொந்தக்காரர் என்று தமிழக முதல்வர் பதிவிட்டுற்றதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் பிறந்த ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி கூடுதல் வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டி அக்கட்டிடத்தில் தோழர்.ஆர்.நல்லகண்ணு நூற்றாண்டு கட்டிடம் என்று பெயரிட உத்தரவிட்ட தமிழ்நாட்டு முதல்வருக்கு இம்மாமன்றத்தில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தின் மையமான திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 23வது வார்டில் அமைந்துள்ள உறையூர் வழி பேருந்து நிறுத்தம் குறத்தெரு என்ற சாதிப் பெயரில் அமைந்துள்ளது. இது பலரையும் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது. இப்பெயரை மாற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் என்கிற வகையில் இம்மாமன்றத்தில் ஏற்கனவே பதிவுசெய்துள்ளேன். திராவிடர் கழக தலைவன்ர் கி.வீரமணி மூலமாகவும் இம்மாமன்றத்திற்கு கடிதம் வந்துள்ளது.
தகைசால் தமிழர் தோழர்.ஆர்.நல்லகண்ணு நுாற்றாண்டு பிறந்த 2024 டிச.26 துவங்கும் 2024 டிச.30ம் தேதிய இம்மாமன்ற கூட்டத்தில் குறத்தெரு என்கிற சாதிப்பெயரில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தை ஆர்.நல்லகண்ணு பேருந்து நிறுத்தம் (RNK) என்று பெயர் மாற்ற இம்மாமன்றத்தில் இத்தீர்மானத்தை சமர்ப்பிக்கிறேன். தமிழக அரசுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision