திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஏகாதசி திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரம்: புறக்காவல் நிலையமும் திறப்பு:

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஏகாதசி திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரம்: புறக்காவல் நிலையமும் திறப்பு:

பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் திருக்கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக புறக்காவல் நிலையத்தை மாநகர காவல் ஆணையர் வரதராஜு திறந்துவைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்…பகல் பத்து மற்றும் இராப்பத்து திருவிழா பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர்செய்ய 450 போலீசார் பணியமர்த்தப்படுவதுடன், 4ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.

கோயிலின் உட்பகுதியில் 117 இடங்களிலும், வெளிப்பகுதியில் 90 இடங்களிலும் என மொத்தம் 207 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு
சிசிடிவி கட்டுப்பாட்டு அறை கண்காணிக்கப்படும் என்றார்.

பக்தர்களுக்கு உதவும் வகையில் 32 இடங்களில் மே ஐ ஹெல்ப் யூ பூத் அமைக்கப்படும். போக்குவரத்து மாற்றம் குறித்து 3ஆம் தேதி அறிவிக்கப்படும். பத்திரிக்கையாளர்களுக்கென உரிய வசதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

3 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்படும் என்று ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்தார்.,இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் காவல் துணை ஆணையர்கள் நிஷா, வேதரத்தினம் மற்றும் தலைமை அர்ச்சகர்கள் சுந்தர் பட்டர், நந்து பட்டர் ஆகியோர் பங்கேற்றனர்.