ஒரு லட்சத்து எட்டு வடைமாலை: திருச்சியில் அனுமன் ஜெயந்தி:

ஒரு லட்சத்து எட்டு வடைமாலை: திருச்சியில் அனுமன் ஜெயந்தி:

அனுமன் ஜெயந்தி முன்னிட்டு திருச்சியில் பிரசித்திபெற்ற கல்லுக்குழி
ஆஞ்சநேயருக்கு 1லட்சத்து 8வடைமாலை சாற்றப்பட்டது.அன்புக்கும், தொண்டுக்கும் , வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கலியுக கடவுளான ஸ்ரீ ராமபக்தன் அனுமனை கலியுகக் கடவுளாக போற்றப்படுகிறார்.

அனுமன் மார்கழி மாதம் அமாவாசையன்று  மூலம் நட்சத்திரத்தில் அவதரித்ததினமான இன்று அனுமன்ஜெயந்தி விழா நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் மிகவும் விமரிசையாக
கொண்டாடப்பட்டுவருகிறது.

Advertisement

இந்நிலையில் அனுமன் ஜெயந்தியையொட்டி திருச்சியில் பிரசித்திபெற்ற கல்லுக்குழி
ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது .
பின்னர் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை. மற்றும் 10 ,008 ஜாங்கிரி மாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் (முழங்க லட்சார்த்தனையும், ராமபாராயணமும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
நீண்ட வரிசையில் நின்று அனுமனை தரிசித்து சென்றனர்.