இணைய வழியில் இயற்கை உணவுப்பொருட்கள் விற்பனை. அசத்தும் பெண் மருத்துவர்.
இணைய வழியில் இயற்கை உணவுப்பொருட்கள் விற்பனை. அசத்தும் பெண் மருத்துவர்.
உணவே மருந்து என்று வாழ்ந்து கொண்டிருந்த நமக்கு, உணவு பயிரிடும் போதே நஞ்சாக்கி அதையே உண்ணும் நிலைக்கு வந்துள்ளோம். இயற்கை சார்ந்த உணவுகள் மீது இயற்கையாய் விளைவித்த பொருட்கள் மீதும் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. திருச்சி - திண்டுக்கல் சாலையில் பிராட்டியூர் பகுதியில் mpr ஃபுட் ப்ராடக்ட்ஸ் என்ற பெயரில் சொந்தமாக தயாரித்த பொருட்களை HODmarket.com என்ற பெயரில் இணைய தளத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து ( Health Organic Diet ) MPR FOOD PRODUCTS நிறுவனர் டாக்டர் பார்கவி ராஜா கூறுகையில்... இயற்கையான பொருட்களை மக்களுக்கு ஆரோக்கியமான முறையில் கொடுக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக எங்களுடைய தயாரிப்புகள் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். அடுத்த கட்டமாக இன்னும் எளிதாக மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காக hodmarket.com என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறோம்.
ஹெல்த் அண்ட் டயட் என்ற பிரிவில் எங்களுடைய பொருள்கள் விற்பனை செய்து வருகிறோம். குறிப்பாக எங்களுடைய விற்பனைப் பொருட்களில் பசுமஞ்சள் பேஸ்ட் மிகவும் மக்களிடையே விரும்பத்தக்க தயாரிப்பாக மாறியுள்ளது. சாதாரணமாக பசு மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் இதில் மிளகு, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து பேஸ்ட் முறையில் செய்து தருவதால் மக்கள் இதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். இந்தியாவிலேயே பசு மஞ்சள் பேஸ்ட் தயாரிப்பதில் முதன்மை நிறுவனமாகவும், முதல் நிறுவனமாகவும் எங்கள் நிறுவனம் உள்ளது.
naach என்ற பெயரில் ஸ்நாக்ஸ் தயாரிப்பிலும் ஈடுபடுகிறோம். இவை முழுக்க முழுக்க ஆரோக்கியத்தை சார்ந்தே தயாரிக்கப்படுகிறது. தேங்காய் சிப்ஸ் எண்ணெயில் பொரித்தெரிக்காமல் முழுக்க முழுக்க டிரை செய்து தயாரிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பாதாமை ஊற வைத்து தயாரிக்கிறோம். இப்படி ஒவ்வொரு பொருளிலும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்து கொண்டிருக்கிறோம். திணை வகைகள் குறிப்பாக கேழ்வரகு, குதிரைவாலி அதிகமாக ஸ்நாக்ஸ் வகைகளில் பயண்படுத்துகிறோம், விதை வகைகளையும் ஸ்நாக்ஸ் பிரிவில் விற்பனை செய்கிறோம்.
எண்ணெய் பயன்பாடு என்பது ஒரு முறை மட்டுமே என்பதில் கவனமாக இருக்கிறோம். பொருள்களின் தரத்தை பார்த்து மக்கள் மீண்டும் மீண்டும் வாங்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவே இதனை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும், இன்னும் பல வகைகளில் ஆரோக்கியம் சார்ந்த உணவு பொருட்களை மக்களிடையே கொண்டு சேர்க்க என்று நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF