திருச்சியின் பிரபல 4 நகைக்கடைகளுக்கு கடத்தல் தங்கம் விற்பனையா? அமலாக்கத்துறை 20 மணி நேர சோதனை
திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் உள்ள சக்ரா செயின் ஜுவல்லரி, ஜாபர்ஷா தெரு பகுதியில் உள்ள ரூபி ஜூவல்லரி (உரிமையாளர் ரூபி சங்கர்) சூர்யா ஜுவல்லரி (உரிமையாளர் சுகுமார்) மற்றும் அவரது மற்றொரு கடை விக்னேஷ் ஜுவல்லரி ஆகிய நகை கடைகளில் ராகேஷ் சர்மா என்பவரின் தலைமையின் கீழ் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளிலிருந்து விமானம் மூலம் கடத்தி வரும் நகைகளை வாங்கி அவற்றை முறைகேடாக விற்பனை செய்யப்படுவது, நகைகடைகளில் சட்ட விரோதமான பண பரிவர்த்தனை, ஜி.எஸ்.டி கணக்கு காட்டாமல் நகைகள் விற்பனை செய்வது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மிக முக்கியமான இந்த நான்கு கடைகளும் கடத்தல் தங்கம் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் உள்ளிட்டவைகளை செய்ததற்காக இந்த சோதனை என அமலாக்கத்துறை தகவல் வெளியாகி உள்ளது. மிக முக்கியமாக திருச்சியில் நான்கு பிரபல நகைக்கடைகளுக்கு இவர்கள் வெளிநாட்டிலிருந்து மற்றும் கடத்தல் தங்கத்தை கொண்டு வந்து இவர்கள் விற்பனை செய்ததாக சோதனையில் தெரிய வருகிறது.
நேற்று (20.11.2023) மதியம் மேற்கண்ட கடைகளில் வாடிக்கையாளர்கள் வருவது போல் வந்து விட்டு நள்ளிரவு முதல் மேற்கண்ட கடைகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களிடம் தொடர்ந்து 20 மணி நேரமாக தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision