சசிகலா உள்ளிட்ட யாருடைய வருகையும் திமுகவின் வெற்றியை பாதிக்காது - கே.என் நேரு பேட்டி!!

சசிகலா உள்ளிட்ட யாருடைய வருகையும் திமுகவின் வெற்றியை பாதிக்காது - கே.என் நேரு பேட்டி!!

Advertisement

திருச்சியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் வாக்கு சாவடி எந்திரங்களை சரிபார்க்கும் பணியை கழக முதன்மைச் செயலாளர் கே. என்.நேரு நேரில் பார்வையிட்டார் .

Advertisement

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.என்.நேரு..."சசிகலா உள்ளிட்ட யாருடைய வருகையும் தி.மு.க வின் வெற்றியை பாதிக்காது. தி.மு.க தலைவர் ஸ்டாலினை ஐபேக் இயக்குகிறது என கூறுவது தவறு. ஐபேக்கை இயக்குவதே ஸ்டாலின் தான். தி.மு.க மீது குறை கூற வேண்டும் என்பதற்காகவே சிலர் ஐபேக் கூறும்படி தான் ஸ்டாலின் செயல்படுகிறார் என கூறுகிறார்கள்.

பொதுமக்களின் குறைகள், புகார் மனுவை பெறுவதற்கு திமுக ஆட்சி காலத்திலேயே முதல்வர் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு விட்டது. தற்போது ஆளும் அதிமுக அரசு புதிதாக எதுவும் செய்துவிடவில்லை" என்றார்

Advertisement

மேலும் அவருடன் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் வழக்கறிஞர்கள் ஓம் பிரகாஷ் ,பாஸ்கர், அந்தோணி ராஜ், பழனியாண்டி கருப்பையா கதிர்வேல் பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய் இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்