காவிரி ஆற்றில் குழாயிலிருந்து வானை நோக்கி பீய்ச்சிய கழிவுநீர்

காவிரி ஆற்றில் குழாயிலிருந்து வானை நோக்கி பீய்ச்சிய கழிவுநீர்

திருச்சி பழைய காவிரி பாலத்தில் பாதாள சாக்கடைக்கான நீரேற்று குழாய் அமைக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலே ஆகிவிட்டதால் பெரிய குழாயில் ஆங்காங்கே சிறு சிறு விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது குழாயில் இருந்து கழிவு நீர் வேகமாக வானை நோக்கி பீய்ச்சி அடித்துக் கொண்டிருக்கிறது.

தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் நீரேற்று செயலை நிறுத்தியுள்ளனர். திருச்சி மாநகராட்சியில் உள்ள ஏழு வார்டுகளுக்கான பாதாள சாக்கடை நீரை கொண்டு செல்ல இந்த பெரிய சிமெண்ட் குழாய் பழைய காவிரி பாலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் வழியாக பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது இரண்டு பைப்புகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதால் கழிவு நீர் மிக வேகமாக பீய்ச்சியடித்து காவிரி ஆற்றில் கொட்டியது. தற்பொழுது திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இரண்டு மோட்டார்களை வைத்து கழிவு நீரை பம்பு செய்வதால் காலை நேரத்தில் கழிவு நீர் வெளியேற்றும் வேகம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 9 எம்எல்டி கழிவு நீர் இந்த குழாய் வழியாக செல்கிறது. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision