கோவில் உண்டியல் திருட முயற்சித்து அலாரம் சத்தம் கேட்டு அலறி அடித்து ஓடிய முதியவர் கைது.

கோவில் உண்டியல் திருட முயற்சித்து அலாரம் சத்தம் கேட்டு அலறி அடித்து ஓடிய முதியவர் கைது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழப்பெருங்காவூர் கிராமத்தில் அமைந்துள்ள சங்கிலி கருப்பன்ன சுவாமி, மாசி பெரியண்ணன் சுவாமி, காமாட்சியம்மன், வரதராஜ பெருமாள் போன்ற பல்வேறு தெய்வங்கள் உள்ளது. இக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இக்கோவில் குடிப்பாட்டு மக்களின் குலதெய்வ வழிபாடு மக்களின் தலைவர் கதிரவன் தலைமையில் கோயிலில் ஆண்டுதோரும் விழாக்கள் நடத்தி கிடா வெட்டி கொண்டாடி வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த உண்டியலில் தங்களது காணிக்கை முறை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவிலில் உண்டியலில் கடந்த 8 ம் தேதி இரவு 1 மணி அளவில் மர்ம நபர் கோவிலில் உள்ள வேல் -யை பயன்படுத்தி திருட முயற்சித்துள்ளார். அப்போது அலாரம் அடித்துள்ளது உடனடியாக அலாரம் சத்தத்தில் மர்ம ஆசாமி பதறி அடித்து ஓடி விட்டார். இச்சம்பவம் குறித்து இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் வெண்ணிலா மற்றும் கோவில் இணைச் செயல் அலுவலர் முத்துக்குமார் லால்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு லால்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், துணை காவல் கண்காணிப்பாளர் முத்தையன் உத்தரவின் பெயரில் காவல் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், மாரீஸ், நாகேந்திரன், ராம்குமார், கார்த்தி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிரமாக தேடி வந்த நிலையில் லால்குடி பகுதியைச் சேர்ந்த மாதேஷ் 72 வயது முதியவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் அவர் மீது 100 க்கும் மேற்பட்ட திருட்டு வாக்குகள் உள்ளது. 13 வயதில் இருந்து 72 வயது வரை திருட்டையே தொழிலாக கொண்டு வாழ்ந்து வரும் வரும் மாதேஷ்- யை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision