சிறப்பு குழந்தைகள் கொண்டாட்டம்- பெற்றோர்களுக்கு சிறப்பு கூட்டம்

சிறப்பு குழந்தைகள் கொண்டாட்டம்- பெற்றோர்களுக்கு சிறப்பு கூட்டம்

அந்தநல்லூர் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் சிறப்புக் குழந்தைகள் 100 பேருக்கு  (26.08-2023) ஸ்ரீரங்கம் தேவித் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பல்வேறு திறன் செயல்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசும்,நிலக்கடலை போன்ற பயிறு வகைகளும் வழங்கப்பட்டது.

பெற்றோர்களுக்கு திருச்சி மாவட்ட மாற்றுத்திறனானிகள் மறுவாழ்வு அலுவலர் சந்திரமோகன் அவர்கள், குழந்தைகளுக்கு அரசின் திட்டங்கள் அவற்றை பெறும் எளிய வழிமுறைகளை விளக்கிக் கூறினார்.

பேராசிரியர் பிரபாகர் அவர்கள் குழந்தைகளை பெற்றோர்கள் எவ்வாறு திறன் பெற வைக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதை உணர்த்தினார் - கல்வியாளர் இராஜேந்திரன் சிறப்புக் குழந்தைகளுக்கான கல்வி முறைகள் குறித்து விளக்கினார். ஹோலிகிராஸ் சர்வீஸ் சொசைட்டி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சிறப்புக் குழந்தைகளுக்கான நிகழ்வுகளை பயிற்சி பெற்ற சிறப்பு மாணவர்கள் செய்து காட்டி பெற்றோர்களை வியக்க வைத்தனர்.பெற்றோர்கள் நம்பிக்கையுடன்தங்கள் குழந்தைகளைஎதிர்காலத்திற்கு தயார்படுத்த இந்நிகழ்வு உதவியது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision