உய்யகொண்டானில் கழிவு நீர் - 30 லட்சம் எங்கே?

உய்யகொண்டானில் கழிவு நீர் - 30 லட்சம் எங்கே?

திருச்சி மாநகரின் வழியாக பாயும் உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராடி வருகின்றனர். 

இந்த நிலையில் உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விக்னேஷ்வரன் தங்கவேல் என்பவர் தனி அலுவலர், முதல்வரின் முகவரித்துறை, தலைமை செயலகத்திற்கு மனு அனுப்பி இருந்தார்.

இந்த மனுவிற்கு பதிலளித்துள்ள மாநகராட்சி நிர்வாகம்...... திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம், Vக்குட்பட்ட உய்யகொண்டான் வாய்க்கால் பகுதியில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு ரூ.30.00 லட்சத்திற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நகராட்சி நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டு பணிகள் விரைந்து செய்து முடிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி இந்த மனுவிற்க்கான பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவு நீர் கலப்பதை தடுக்க ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் இதுவரை மேற்கொள்ளாதது ஏன்? என விக்னேஸ்வரன் கேள்வி எழுப்புகிறார்.

மேலும் தனது மனுவிற்கு பதில் அளித்துள்ள மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நேரடியாக உய்யகொண்டான் வாய்க்காலுக்கு சென்று அங்கு கழிவு நீர் கலக்கும் பகுதியை ஒளிப்பதிவு மூலம் நேரடியாக ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.

காலம் தாழ்த்தாமல் உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision