சிறப்பு மனு நீதி நாள் நிறைவு விழா
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், கீழ்பெருங்காவூர் கிராமம் புனித பிலோமினால் ஆர். சி.நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (26.04.2023) நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
இதில் பல்வேறு துறைகளின் சார்பின் 356 பயனாளிகளுக்கு 1 கோடியே 43 ஆயிரம் மதிப்பீட்டில் அரசின் நலந்திட்ட உதவிகளை வழங்கி அரசுத் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களின் பார்வைக்காக அமைக்கப்பட்ட திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளைமாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் பார்வையிட்டு உரையாற்றினார்.
சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது... தொலைதூரத்து கிராம மக்களும் அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு் முதலமைச்சர் மக்களுக்கான பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
துறை வாரியாக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் பயனடைகின்ற வகையில் உரிய துறை அலுவலர்கள் மக்களிடம் எடுத்துக் கூறியும், மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று அதன் மீது உடனடி தீர்வு கண்டு திட்ட உதவிகள் வழங்கிடும் வகையிலும் இந்த சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது.
பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து விரிவாகஎடுத்துரைத்தார்கள். பொதுமக்களாகிய நீங்கள் இத்திட்டங்களை கவனித்து பயனடைந்திடவும், மேலும், உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும் இத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து அவர்களும் இத்திட்டங்களை பெற்று பயன்பெற செய்வதே இந்த மனுநீதி நாளின் முக்கிய நோக்கமாகும்.
அதனடிப்படையில், இன்று நடைபெற்று வரும் மனுநீதி நிறைவு நாள் முகாமில் 92 பயனாளிகளுக்கு ரூ-46 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களும், 29 பயனாளிகளுக்கு ரூ.14.50 இலட்சம் மதிப்பீட்டில் உட்பிரிவு செய்து தீர்வை விதித்து பட்டாக்களும், 43 பயனாளிகளுக்கு ரூ.21.50 இலட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிட "இ" பட்டாக்களும், 14 பயனாளிகளுக்கு நத்தம் பட்டாக்களையும், 3 பயனாளிகளுக்கு இணையவழி பட்டா மாறுதல்களும், 2 பயனாளிகளுக்கு விதவை சான்றிதழ்களும், 4 பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் ரூ.24 ஆயிரம் மதிப்பீட்டின் தையல் இயந்திரங்களையும், 6 பயனாளிகளுக்கு ரூ.29 ஆயிரத்து 220 மதிப்பீட்டில் சலவைப் பெட்டிகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.2,07416 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும்,
தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.14.320 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.16,950 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.1,980 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், சமூகப் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.36 ஆயிரம் மதிப்பீட்டில் முதிர்கன்னி 'உதவித் தொகையும், 1 பயனாளிக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் கணவரால் கைவிடப்பட்டவருக்கான உதவித் தொகையும், 20 பயனாளிகளுக்கு ரூ.2,40 இலட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி உதவித் தொகையும், 54 பயனாளிகளுக்கு ரூ.6.48 இலட்சம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகையும்,
20 பயனாளிகளுக்கு ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டின் விதவை உதவித் தொகையும், 20 பயனாளிகளுக்கு ரூ.51,750 மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகையும், 1 பயனாளிக்கு ரு.8000 மதிப்பீட்டில் திருமன உதவித்தொகையும், 2 பயனாளிகளுக்கு ரூ.24,000 மதிப்பீட்டில் மருத்துவ உதவித்தொகையும், 13 பயனாளிகளுக்கு ரூ2.00 இலட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித் தொகையும் என மொத்தம் 356 பயனாளிகளுக்கு 1 கோடியே 43 ஆயிரத்து 636 மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவார் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் செல்வம், இலால்குடி நகர்மன்ற தலைவர் துரைமாணிக்கம், இலால்குடி ஒன்றியக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், இலால்க்குடி வருவாய் வட்டாட்சியர் க.விக்னேஷ், கீழ்பெருங்காவூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயஆரோக்கியராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn