சிறுவர் சிறுமியர்களுக்கான கோடைகால பயிற்சி

சிறுவர் சிறுமியர்களுக்கான கோடைகால பயிற்சி

மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI), பணிபுரியும் நகர்புற குடிசைபகுதியில் வசிக்கும் சிறுவர் சிறுமியருக்கான மூன்றுநாள் கோடைகால பயிற்சி முகாம்-2023 திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள கி.ஆ.பெ. விஸ்வநாதன் தொடக்கப்பள்ளியில் 24.05.2023 இன்று காலை இனிதே துவங்கியது.

 இத்துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிர்மலாராணி மகளிர் சட்டஉதவி மன்றம், தமிழ்நாடு. அவர்கள் பேசுகையில், குழந்தை பாதுகாப்புமுறைகள் பற்றியும் வருங்கால சந்ததிகள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றி விளக்கியதோடு இது போன்ற கோடைகால பயிற்சியினை பயனுள்ளதாக அமைத்துகொள்ள வாழ்த்துகளை கூறினார்.

 

மேலும் இவ்விழாவிற்கு முனைவர்.அம்பலவாணன் திட்ட இயக்குநர் PDI அவர்கள் தலைமை தாங்கினார். இவ்விழாவினை திரு.கண்ணன், திட்டஅலுவலர், திரு.முத்துக்குமார், திட்ட ஒருகினைப்பாளர், திருமிகு.ஜெசிந்தா திட்ட அலுவலர் ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஒருகிணைப்பு செய்தனர். முடிவில் திருமிகு.ஜெய்பேபி ஆலோசகர் PDI மகளிர் ஆதரவு மையம் அவர்கள் நன்றி கூறினார்.

நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. இந்த மூன்று நாட்களில் சிறுவர் சிறுமியருக்கு யோகா, ஓவியம், அழகிய கைவினை பொருட்கள் தயாரிப்பு பயனுள்ள கதைகள், வீட்டு கழிவு பொருட்களைகொண்டு அலங்கரிப்பு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விடுகதைகள் போன்றவை கற்றுத்தரப்பட உள்ளது.