ரூ.3 இலட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் - வெளி மாநிலத்தை சேர்ந்த 2 நபர்கள் கைது

ரூ.3 இலட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் - வெளி மாநிலத்தை சேர்ந்த 2 நபர்கள் கைது

திருச்சி மாநகரில் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாபுரோட்டில் உள்ள வீட்டில் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா போதை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர், அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெளி மாநிலத்தை சேர்ந்த 2 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரேவராம் (30) மற்றும் கஜானாராம் (34) ஆகிய இருவரும் வெளிமாநிலங்களில் இருந்து குட்கா பொருள்களை கடத்தி வந்து, பாபுரோட்டில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்து திருச்சியில் விற்பனை செய்வது தெரியவந்தது.

56 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 240 கிலோ ஹான்ஸ், 10 கிலோ கூல்லிப், 97.500 கிலோ விமல், 2 கிலோ மாணிக்சந்த் என மொத்தம் சுமார் ரூ.3,00,000/- மதிப்புள்ள 350 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தும், குட்கா பொருள்கள் விற்பனை செய்ய பயன்படுத்தி வந்த 2 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 2 செல்போன்களை அவர்களிடருந்து பறிமுதல் செய்தும், மேற்படி எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது கைது செய்தனர்.

மேலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர்களை அதிரடியாக பிடித்த கோட்டை காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படையினரை மாநகர காவல் ஆணையர் காமினி வெகுவாக பாராட்டினார்.

மேலும் திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision