பல ஆண்டு கோரிக்கை 4 கிலோமீட்டர் பயணத்திற்கு முடிவு-பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் -3 வார்டு எண் 39,40 பகுதியை இணைக்கும் கவுருகரை வாய்க்காலின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு ஆகியோர் திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சர் மனில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் பொது மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நியூ டவுன் முத்துநகர் பகுதியில் பாலம் கட்டி முடிக்கப்பட்டதுஇப்பாலமானது மூலதன மானிய நிதி 2023- 2024 ன் கீழ் மதிப்பீடு ரூ.131.00 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது.இப்பாலமானது வார்டு எண் 40 மற்றும் வார்டு எண் 39 பாலாஜி நகரை இணைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
பள்ளியில் பயிலும் பள்ளி மாணவர்கள் நெடுஞ்சாலையை பயன்படுத்தாமல் பள்ளிக்கு செல்ல எளிதான முறையில் சுமார் 4.00 கிமீ தூரத்திற்கு பயணம் செய்வது குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலக நேரத்தில் நெடுஞ்சாலையில் திரும்புவதால் பள்ளி வாகனங்கள் விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.வார்டு எண் 39 மற்றும் வார்டு எண் 40ல் வசிக்கும் பொது மக்கள் சுமார் 10,500 நபர்கள் மற்றும் 4 ஆயிரம் பள்ளிக்கு செல்லும் பயனடைவார்கள். இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே என் சேகரன்
மாநகராட்சி ஆணையர் சரவணன் மாநகராட்சி உதவி ஆணையர் சரவணன் உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவ ராமன் மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ் சிவக்குமார் நலச்சங்கங்களின் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை டெலகிராம் ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision