வனக்கோட்ட பகுதிகளில் ஈர நில பறவை கணக்கெடுப்பு பணி

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி வனக்கோட்ட பகுதிகளுக்கு உட்பட்ட 20 ஈர நிலங்களில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு திருவெறும்பூர், கூத்தைப்பார், கிளியூர் ,கிருஷ்ண சமுத்திரம் ,மணப்பாறை துறையூர் ஆலத்துடையான் பட்டி திருத்தலையூர், துவரங்குறிச்சி, முக்கொம்பு ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டது.இந்நிகழ்வில் 80க்கும் மேற்பட்ட வனத்துறை
களப்பணியாளர்களும், 100க்கும் மேற்பட்ட இயற்கை தன்னார்வலர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டு பறவைகள் கணக்கெடுப்பினை நடத்தினர்.வலசை வரும் பறவைகள் பறவைகளின் வாழ்விடம் ஏரி குளங்கள் மற்றும் இதர நீர் நிலைகளில் நீர்வாழ் பறவைகள் மேலாண்மை மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக இக்கணக்கெடுப்பானது நடத்தப்பட்டது இதில் பறவைகளின் இனங்கள் பறவைகளின் எண்ணிக்கை நீர்நிலைகளின் தரம் ஆகியவை பதிவு செய்யப்பட்டன. இன்று கணக்கீடு செய்யப்பட்ட பறவைகளில்
நீல தாழைக்கோழி, தாமரைக்கோழி, செம்மூக்கு ஆள்காட்டி, சிறிய நீல மீன் கொத்தி, மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, சாம்பல் நாரை, செந்நீல நாரை, சிறிய அரிவாள் மூக்கன், நத்தை குத்தி நாரை, முக்குளிப்பான், பாம்பு தாரா, குள்ளதாரா, நாமக் கோழி, புள்ளி மூக்கு வாத்து, சின்ன சீழ்க்கை சிறகி , ஆகியவைகள் பெரும்பான்மையாக கண்டறியப்பட்டவை, இக்கணக்கெடுப்பில்
பிஷப் ஹூபர் கல்லூரி திருச்சி, நேரு மெமோரியல் கல்லூரி புத்தனாம்பட்டி, ஹோலி கிராஸ் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் கல்லூரி,அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கல்லூரி மாணவ மாணவிகள் இயற்கை தன்னார்வலர்கள், தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.இக்கணக்கெடுப்பினை மாவட்ட வன அலுவலர் திருமதி S.கிருத்திகா இ.வ.ப, அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள், உதவி வனப் பாதுகாவலர்கள் திரு R.சரவணகுமார் திரு காதர் பாட்ஷா,வனச்சரக அலுவலர்கள் V. P. சுப்ரமணியம்,தினேஷ், கிருஷ்ணன், ரவி ஆகியேர்கள் பறவைகள் கணக்கெடுப்பினை ஒருங்கிணைந்து நடத்தினர்.
கணக்கெடுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் திருச்சி காவேரி மருத்துவமனை டி-ஷர்ட், தொப்பி வழங்கி கௌரவத்தினர் மற்றும் திருச்சி மாவட்ட வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட மாணவ மாணவியர்கள் தன்னார்வலர்களுக்கு மாவட்ட வன அலுவலரால் சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision