பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்றவர் கைது

திருவெறும்பூர் காட்டூர் பகுதியில் உள்ள பள்ளி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா விற்றவரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவரிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் காட்டூர் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் நின்ற வரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
அதனை தொடர்ந்து அவரது வாகனத்தை சோதனையிட்ட போது அதில் ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.அதன் அடிப்படையில் அவரை பிடித்து விசாரித்தப்போது திருச்சி ராம்ஜி நகர் மலையடிப்பட்டியை சேர்ந்த அசோக்குமார் (67) என்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவரை கைது செய்து திருச்சி 6வதுகுற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்
மேலும் அசோக்குமார் இடம் இருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா, ஒரு பட்டன் போன், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.கஞ்சாவின் மதிப்பு ரூ11 ஆயிரத்து 500 ஆகும்.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision