மனதுக்கு மகிழ்ச்சி விரைவில் குறைகிறது பெட்ரோல் டீசல் விலை

மனதுக்கு மகிழ்ச்சி விரைவில் குறைகிறது பெட்ரோல் டீசல் விலை

மத்திய அரசின் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம், இப்போது ரஷ்யாவிடம் இருந்து பெரும் அளவில் கச்சா எண்ணை கொள்முதல் செய்து, சுத்திகரித்து சந்தைக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது. இந்த வரிசையில், அமெரிக்காவின் பொருளாதார தடைநீக்கப்பட்ட நிலையில், இப்போது வெனிசுலா நாட்டில் இருந்தும் கச்சா எண்ணை கொள்முதல் செய்து, சுத்திகரிப்பு செய்யத்திட்டமிட்டுள்ளதாக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சுத்திகரிப்பு பிரிவு தலைவர் சஞ்சய்கன்னா தெரிவித்தார்.

இந்தியாவின் பிரதான கச்சா எண்ணை கொள்முதல் நாடுக ளில் ஒன்றாக வெனிசுலா இருந்தபோது, மாதம்தோறும் ஒரு கோடி பேரல் கச்சா எண்ணை அங்கிருந்து இறக்குமதி செய் யப்பட்டது. அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக, வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணை பாரத் பெட்ரோலியம் இறக்குமதி அடியோடு குறைக்கப்பட்டது. இந்நிலையில், வெனிசுலா மீதான பொருளாதாரத் தடையை கடந்த அக்டோபர் மாதத்தில் அமெரிக்கா தற்காலிகமாக தளர்த்தியது.

இதனால், இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், மிட்டல் எனர்ஜி உட்பட பல நிறுவனங்கள் வெனிசுலாவில் இருந்து முழுவீச்சில் கச்சா எண்ணையை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளன. ரஷ்யா வழங்கும் தள்ளுபடியைப் போல், வெனிசுலாவும் கணிசமான அளவு தள்ளுபடியை வழங்குவதாக தெரிவித்துள்ளதால், எண்ணை கொள்முதல் அதிகரிக்கும் சூழல் உள்ளது.

இந்நிலையில்தான் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான பாரத்பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக, சஞ்சய்கன்னா தெரிவித்தார். அதேநேரத்தில், இந்த இறக்கு மதியால், ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்து கொண்டி ருக்கும் கச்சா எண்ணைக் கொள் முதலில் எந்தத் தொய்வும் ஏற் படாது என்று அவர் தெரிவித்தார். சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் புத்தாண்டு பரிசாக பெட்ரோலுக்கு ரூபாய் 10ம் டீசலுக்கு ரூபாய் 4 முதல் ஐந்து ரூபாய் வரை விலை குறைக்கப்படலாம் என டெல்லியில் தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இப்படி ஒரு முடிவு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision