ஸ்மார்ட் சிட்டி என்கின்ற பெயரில் மரங்களை நாசம் செய்யும் திருச்சி மாநகராட்சி!! சிறப்பு தொகுப்பு!!!

ஸ்மார்ட் சிட்டி என்கின்ற பெயரில் மரங்களை நாசம் செய்யும் திருச்சி மாநகராட்சி!! சிறப்பு தொகுப்பு!!!

மரங்கள்! மரம் நடுவோம் மழை பெறுவோம், மரம் தான் எல்லாம்! என வீரவசனம் பேசிவிட்டு கடைசியில் மரங்களே அளிக்க காத்திருக்கின்றன சில கரை வேஷ்டிகள். இயற்கைக்கு எதிராக மனிதன் செய்த உபாதைகளை ஒரு நாள் மனிதன் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பதற்கு இப்போது நிலவும் சூழ்நிலை மிக சிறந்த உதாரணமாக இருக்கும்.

திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்கின்ற பெயரில் பல மரங்களை பறி கொடுத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம். இதைப்பற்றிய விரிவான செய்தி தொகுப்பை விளக்குகிறது திருச்சி விஷன் இணையதளம்!

தற்போது உள்ள இந்த ஊரடங்கு காலத்தில் திருச்சிக்கு நடைமேடை புதுப்பிக்கும் பணிக்காக 69 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் திருச்சி மலைக்கோட்டை பகுதி,மெயின்கார்டு கேட், பழைய பாஸ்போர்ட் ஆஃபீஸ் ஆகிய பகுதிகளும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் கரூர் சாலை, மேலசிந்தாமணி ஆகிய பகுதிகளில் விறுவிறுவென வேலை நடைபெற்று கொண்டு வருகிறது.

Advertisement

செய்யும் வேலையில் கவனம் செலுத்திய இவர்கள் அங்கு இருக்கும் மரங்களை கண்டுகொள்வதே இல்லை! ஒரு மரம் தான் வெட்டப்படுகிறது என்று சொல்லிவிட்டு பல மரங்களை வேருடன் பிடுங்கி எறிந்து வேலைகளை செய்து வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து திருச்சி சமூக ஆர்வலர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை உண்டு பண்ணியுள்ளது. இந்த மரங்களை வேறு எங்கேயாவது பிடுங்கி வைத்து இருக்கலாமே என கூக்குரலிட்டு வருகின்றன.

மேலும் திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலை ரவுண்டானாவை சிறிய அளவாக மாற்றி அமைக்கும் பணி அடுத்ததாக நடைபெற உள்ளது. இந்த ரவுண்டானாவில் உள்ள மரங்களின் நிலை என்னவாகும் என கேள்விக்குறியில் உள்ளது.மேலசிந்தாமணி பகுதியில் மிகுந்த போக்குவரத்து சிரமம் அதிகமாக காணப்படும். அந்த இடத்தை கடப்பதற்கு சுமார் 15 இலிருந்து 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது எனவே அந்த மேம்பாலத்தை சுருக்குவது குறித்து ஒருபுறமிருந்தாலும் அந்த ரவுண்டானாவில் இருக்கும் மரங்களின் நிலை என்ன என்பது குறித்து கவலையில் உள்ளனர் சமூக ஆர்வலர்கள்.எனவே அந்த மரத்தை உயிருடன் பிடுங்கி வேறு எங்கேயாவது நட்டு வைக்கலாம் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இயற்கையாக அமைந்திருக்கும் இந்த சிட்டியை ஸ்மார்ட் சிட்டி என்கின்ற பெயரில் நாசம் செய்து வருவதாக சிலர் குற்றம் சாட்டி வருகின்றன. எனவே மாநகராட்சி தலையிட்டு மரங்களை வெட்ட வேண்டாம் என்றும்,  மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும் என்பது பலருடைய முக்கிய கோரிக்கையாக உள்ளது.