புதிய வாக்காளர் அடையாள அட்டையை இ-சேவை மையங்களில் இலவசமாக பெறலாம்

புதிய வாக்காளர் அடையாள அட்டையை இ-சேவை மையங்களில் இலவசமாக பெறலாம்

இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட அறிவுரையை செயல்படுத்தும் விதமாக இவ்வாறு அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளையும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 342 அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

இத்திட்டம் 01.10.2021 முதல் நடைமுறைக்கு வரும் எனவே அனைத்து வாக்காளர்களும் இ சேவையை பயன்படுத்தி மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn