திருச்சியில் 2 இடங்களில் ரயில் மறியல், 17 இடங்களில் சாலை மறியல்

திருச்சியில் 2 இடங்களில் ரயில் மறியல், 17 இடங்களில் சாலை மறியல்

ஒன்றிய மோடி அரசின் 3−வேளாண் விரோத சட்ங்களையும், மின்சார திருத்த சட்டத்டதையும், தொழிலாளா் விரோத 4−சட்ட தொகுப்புகளையும் திரும்ப பெற வேன்டும் ,வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதர விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேன்டும் மென கடந்த 10−மாத காலமாக டெல்லியில் போராடி வரும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு செப்டம்பா் 27−அன்று அகில இந்திய அளவில் "பந்த்" போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்திய அளவிலும், தமிழகத்திலும் "பந்த்"போராட்டாத்தை வெற்றிகரமாக நடத்திட விவசாய அமைப்புகளும்,தொழிற் சங்க அமைப்புகளும் நகரங்களிலும்,கிராம பகுதிகளிலும்  துண்டு பிரசுரங்கள் கொடுத்து மக்களை திரட்டி வருகின்றனா்.

திருச்சி மாவட்த்திலும் நகா் பகுதிகளிலும், கிராம பகுதிகளிலிலும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டு  வருகிறது. திருச்சி மாவட்டத்தில் செப்டம்பர் 27ம் தேதி அன்று திருவரம்பூா், அந்தநல்லூா் ஒன்றியங்களில் 2−இடங்களில் ரயில் மறியலும், மணப்பாறை ஒன்றியத்தில் மணப்பாறை, புத்தாணத்தம், மறவணூா், மருங்காபுாி ஒன்றியத்தில் துவரங்குறிச்சி, வளநாடு கைகாட்டி, உப்பிலியபுரம் ஒன்றியத்தில் தளுகை, கொப்பம்பட்டி மற்றும் வைய்யம்பட்டி, துறையூா், தொட்டியம், முசிறி, தா.பேட்டை, மண்ணச்நல்லூா், லால்குடி, மணிகன்டம், புள்ளம்பாடி ஆகிய இடங்களில் அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு மற்றும் திமுக, இடதுசாாி அமைப்புகளின்  தலைமையிலான அணைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்புகள் சாா்பாக சாலை மறியல் போராட்டங்கள் நடைபெறும்.

இந்தியாவை காா்பரேட்களுக்கு விற்க துடிக்கும் மோடி அரசுக்கு எதிராக டெல்லியில் மோடி அரசின் அடக்கு முறைகளுக்கும் அஞ்சாது, நடுங்கும் குளிா்,கொட்டும் மழை,சுட்டொிக்கும் வெயில் என பாராது உலகமே வியக்கும் அளவுக்கு தொடா் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள்  போராட்டத்திற்க்கு மேலும் வலு சோ்க்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் செப் 27−அன்று நடைபெறும்

ரயில், சாலை மறியல் போராட்டாங்களில் அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு விற்க்கு ஆதரவு தரும் வகையில் அனைத்து அரசியல் கட்சியினா், தொழிற் சங்க அமைப்புகள், பொது நலஅமைப்புகள், இளைஞா், மாதா், மாணவ அமைப்புகள், பொது மக்கள் பெருமளவில் பங்கு கொள்ள வேன்டுமாய் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அயிலை சிவசூாியன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn