நீதி கட்சி போட்ட விதை தான் இன்று உயர்கல்வியில் நம் தமிழ்நாடு உயர்ந்து வரக் காரணம் - திருச்சியில் முதலமைச்சர் புகழாரம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்திற்கு வருகை தந்த போது ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் நின்று ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா மேடைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் நினைவு பரிசை வழங்கி வரவேற்றார்.
பட்டமளிப்பு விழா நடைபெறுவதற்கு முன்பாக பதக்கம் பெறும் மாணவர்களுடன் குழு புகைப்படத்தை பிரதமர் எடுத்து கொண்டார். பின்னர் 33 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கெளரவித்தார்.
இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகையில்.... நூறாண்டுக்கு முன் நீதி கட்சியால் போடப்பட்ட விதை தான் இன்று கல்வியில் நாம் வளர்ந்து நிற்க காரணம். கல்வியில் சிறந்த பட்டியலில் தமிழகமே அதிகம் இடம் பெற்று இருக்கும். நம் திராவிட மாடல் ஆட்சியில் ... இன்னார் தான் படிக்க வேண்டும் என்கிற நிலை மாறி அனைவருக்கும் உயர் கல்வி கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கல்வியில் சமூக நீதியையும், புதுமைகளையும் நிரப்புவதே பல்கலைக்கழகங்களில் நோக்கமாக இருக்க வேண்டும். அத்தகைய பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. சமூக நீதி புரட்சியை கல்வியில் ஏற்படுத்தி வருகிறோம்.
எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக, 29 லட்சம் மானவர்கள் மற்றும் 32 ஆயிரம் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஒரே வருடத்தில் 40 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடித்தாருங்கள். இதுவே ஒரு தந்தை உனர்வோடும், முதலமைச்சராகவும் நான் உங்களுக்கு கூறுவது. உலக தரவரிசை மற்றும் தேசிய வரிசையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளது.
உயற்கல்விக்கான அனைத்து கட்டமைப்பையும் நாம் உருவாக்கியதால் தான் பாலிடெக்னிக் மற்றும் பி.ஹெ.டியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலாவதாக உள்ளோம். 1663 கலை அறிவியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளது. 143 பெண்கள் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளது. கல்வியிலும், சமூகத்திலும் புதுமையை புகுத்துவதே பல்கலைக்கழகங்களின் நோக்கம். மானவர்களே இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் புகழ் சேருங்கள் என கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision