2,000 ரூபாய் நோட்டுகளில் 97.38 சதவிகிதம் திரும்ப வந்தது - ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
மே 19, 2023 நிலவரப்படி புழக்கத்தில் இருந்த ரூ.2,000 கரன்சி நோட்டுகளில் 97.38 சதவீதம் வங்கிக்குத் திரும்பியதாக இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 1ம் தேதி தெரிவித்தது. அறிவிக்கப்பட்ட மே 19, 2023 அன்று 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என அறிவித்தது ஆர்.பி.ஐ அன்றைய தினம் புழக்கத்திக் ரூபாய் 3.56 லட்சம் கோடி இருந்தது.
டிசம்பர் 29, 2023 அன்று புழக்கத்தில் இருந்த அத்தகைய ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூபாய் 9,330 கோடியாகக் குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய மற்றும்/அல்லது மாற்றுவதற்கான வசதியை அக்டோபர் 07, 2023 வரை நாட்டில் உள்ள அனைத்து வங்கிக்கிளைகளிலும் அனுமதியளித்தது.
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு அலுவலகங்களில் (RBI வெளியீடு அலுவலகங்கள்) 1 மே 19, 2023 முதல் மேலும் நீடித்தது. அக்டோபர் 09, 2023 முதல், RBI வெளியீட்டு அலுவலகங்கள் தனிநபர்கள் / நிறுவனங்களிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை அவர்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதற்காக ஏற்றுக்கொண்டன. மேலும், பொதுமக்கள் இந்திய தபால் நிலையம் மூலம் 2000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்காகவும் வசதிகளை ஏற்படுத்தி தந்தது.
அந்த நேரத்தில் புழக்கத்தில் இருந்த அனைத்து 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் சட்டப்பூர்வமாக திரும்பப் பெற்ற பிறகு, பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்ய நவம்பர் 2016ல் ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது குற்2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.