சிறந்த சமூகத்தையும், சிறந்த நாட்டையும் கல்வியால் மட்டுமே உருவாக்க முடியும் - திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

சிறந்த சமூகத்தையும், சிறந்த நாட்டையும் கல்வியால் மட்டுமே உருவாக்க முடியும் - திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்திற்கு வருகை தந்த போது ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் நின்று ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா மேடைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் நினைவு பரிசை வழங்கி வரவேற்றார். பட்டமளிப்பு விழா நடைபெறுவதற்கு முன்பாக பதக்கம் பெறும் மாணவர்களுடன் குழு புகைப்படத்தை பிரதமர் எடுத்து கொண்டார். பின்னர் 33 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கெளரவித்தார்.

இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய சிறப்புரையில்.... தமிழில் வணக்கம் சொன்ன பிரதமர் - 38வது பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 2024ம் ஆண்டில் முதல் நிகழ்வில் இங்கு கலந்து கொள்கிறேன். இளைய தலைமுறைக்கு முன்பாக நான் தற்போது நிற்கும் போது மகிழ்ச்சி கொள்கிறேன். 1982ம் ஆண்டு இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. வழுவான கட்டமைப்புடன் உங்கள் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

அதனால் தான் மொழி, அறிவியல் மற்றும் எல்லா வகையான சாரம்சங்களிலும் இந்த பல்கலைக்கழகம் சிறந்து விளங்குகிறது. கங்கை கொண்ட சோழபுரம் போன்ற பகுதிகளை உலக முழுவதும் உள்ள மாணவர்கள் வந்து ஆய்வு செய்கிறார்கள். நாலாந்தா மற்றும் தக்சஷீலா பல்கலைக்கழகங்கள் இருந்தது போல், காஞ்சிபுரம் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் போன்ற இடங்களில் பல்கலைக்கழகங்கள் சங்கங்கள் இருந்தது தெரிய வருகிறது.

இந்த தலைமுறையில் பாரம்பரியமிக்க இடத்தில் நீங்கள் கல்வி பயின்று உள்ளிர்கள். இது போன்ற நல்ல பல்கலைக்கழகத்தில் நீங்கள் படிக்கும் போது உங்களை இந்த சமூகம் நம்பிகையுடன் பார்க்கிறது. பொருளாதார வளர்ச்சியில் இன்று இந்தியா சிறந்த முறையில் உள்ளது. அதே போல் உலகளாவிய அரங்கில் நம் பல்கலைக்கழகங்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கிறது. சிறந்த சமூகத்தையும், சிறந்த நாட்டையும் கல்வியின் வாயிலாக தான் பெற முடியும்.

2047 மிக பெரிய வளர்ச்சியை நாம் எட்ட வேண்டும் - இளைய தலைமுறையான உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. (புதியதோர் உலகம் செய்வோம் ... என்கிற வார்த்தையை முன் உதாரனம் கட்டிய பிரதமர்) ஆசியன் கேம் மற்றும் பரா கேம் போன்ற பல இடங்களில் நம் வீரர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வென்று வருகின்றனர். 74 விமான நிலையங்கள் தற்போது 150 விமான நிலையங்களாக மாறி உள்ளது என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision