9 கார்களை ஏமாற்றி விற்பனை செய்ய முயன்ற நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

9 கார்களை ஏமாற்றி விற்பனை செய்ய முயன்ற நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சாவை விற்ற நபர் மற்றும் வாடகை தருவதாக கூறி சுமார் 50 லட்சம் மதிப்புள்ள 9 கார்களை பல்வேறு நபர்களிமிருந்து பெற்று கொண்டு ஏமாற்றிய நபர் ஆகியோர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

கடந்த 29.03.22-ந்தேதி கலியமூர்த்திநகர், மிலிட்டரி கிரவுண்ட் அருகில் இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருளை விற்பனை செய்த எதிரி சக்திவேல் வயது 50. த.பெ.கலியமூர்த்தி என்பவரை கைது செய்தும், அவரிமிருந்து சுமார் 2 கிலோ (மதிப்பு ரூ.20000/-) கஞ்சாவை கைப்பற்றி எதிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கடந்த 17.12.21-ந்தேதி திருவானைக்கோவில் சிவம் கார்டனில் பல்வேறு நபர்களிடம் கார்களுக்கு வாடகை தருவதாக கூறி 9 கார்களை (மதிப்பு ரூ.50லட்சம்) பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் கொடுக்கப்பட்ட புகாரில், துரிதமாக விசாரணை செய்து. எதிரி சக்திவேல்  என்பவரை கைது செய்து. வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்கண்ட எதிரிகள் கஞ்சா விற்பனை செய்த சக்திவேல் மற்றும் மோசடியில் ஈடுப்பட்டு சக்திவேல் ஆகியோர்கள் தொடர்ந்து சமூக விரோதசெயல்கள் புரிபவர்கள், மோசடி குற்றச்செயல்களில் ஈடுபடுபர்கள் விசாரணையில் தெரிய என வருவதாலும், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன்,  மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO