முறையான குடிநீர் விநியோகம் இல்லை தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு

முறையான குடிநீர் விநியோகம் இல்லை தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு

ஒரு மாதத்திற்கு மேலாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் தெரிவித்தனர்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சங்குறிச்சி ஊராட்சி மேட்டுத்தெரு கிராமத்தில் ஒரு மாத காலமாக முறையாக தண்ணீர் வராமல் இருந்து வந்தது. இதனால் அன்றாடம் உணவு சமைப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக பலமுறை நிர்வாகத்திடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தேர்தல் புறக்கணிக்கணிப்பு செய்வதாக பொது மக்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தின் போது கையில் குடிக்கவும் தண்ணீர் இல்லை கழுவவும் தண்ணீரில் இல்லை, தேர்தல் புறக்கணிப்பு போன்ற பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு பெண்கள் அமர்ந்திருந்தனர்.

தகவல் அறிந்த லால்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் இன்னும் இரண்டு தினங்களில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும். முறையான குடிநீர் இணைப்பு பெறாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்பு பெற்றுள்ள நபர்களிடமிருந்து குடிநீர் இணைப்புகள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் கூறினர். இதனைத் தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision