ஆயுதங்களுடன், போதை ஊசி, மாத்திரைகள் விற்ற வழக்கில் 2 பெண்கள் உட்பட மூன்று பேர் கைது.

ஆயுதங்களுடன், போதை ஊசி, மாத்திரைகள் விற்ற வழக்கில் 2 பெண்கள் உட்பட மூன்று பேர் கைது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் (32). அவர் தனது உதவியாளருடன் காட்டூர் பகுதிக்கு வந்த பொழுது அந்த பகுதியில் சட்டவிரோதமாக ஆட்டோவில் வைத்து பள்ளி கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்றுக் கொண்டிருப்பது தெரியவந்தது. இது சம்பந்தமாக அவர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது,

ஆட்டோவில் வைத்து போதை பொருள்கள் விற்ற திருச்சி வரகனேரி சந்தானபுரத்தை சேர்ந்த முகமது யூசுப் மகன் ஹசன்அலி (26) இவன் தற்பொழுது வடக்கு காட்டூர் பாத்திமாபுரம் பகுதியில் வசதி வருகிறார். இவனது தாய் ரமிஜா பேகம் (43), தம்பி மனைவி ஆஷிகா பானு (20) ஆகிய மூன்று பேரும் சோர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை ஊசி மற்றும் மாத்திரைகளை ஆட்டோவில் வைத்து விற்றுக் கொண்டிருந்போது திருவெறும்பூர் போலீசார் கையும் களவுமாக மூன்று பேரையும் கைது செய்தனர். அப்பொழுது ஆட்டோவை சோதனையிட்ட போது ஆட்டோவில் ஆயுதங்களும் இருந்தது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் அவர்களிடம் இருந்து போதைப்பொருள் விற்பதற்கு பயன்படுத்திய ஆட்டோ, ரூ.360 ரொக்கம் / 33 மாத்திரை 12 சிரிஞ்சு, ஒரு வால், ஒரு அருவாள் மற்றும் மீன் வெட்ட பயன்படுத்தும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த பொழுது ஹசன்அலி மீது திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் அரியமங்கலம் காவல் நிலையங்களில் போதை பொருள் விற்றதாக 12 வழக்குகள் உள்ளது தெரியவந்தது. அதன் அடிப்படையில் மூன்று பேரையும் திருவெறும்பூர் போலீசார் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் 6ல் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision