தாறுமாறாக விலையேறப்போகும் தர்பூசணி...
தமிழ்நாட்டில் அங்காங்கே தர்பூசணி விவசாயம் செய்யப்பட்டாலும் குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான கீக்களுர், கருங்காலிகுப்பம், நாரியமங்கலம், மாயங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பெரும்பாலானோர் ஆண்டுதோறும் தர்பூசணி பயிரிட்டு வருவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி பயிர் பெரும்பாலானோர் பயிரிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு தர்பூசணி விளைச்சல் அதிகரித்த நிலையில் போதிய வருமானம் இல்லாமல் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இந்த ஆண்டு தொடர் மழை மற்றும் ஒரு மாதம் முன் கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கூடுதல் விலைக்கு விற்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 70 நாட்கள் பயிரான தர்ப்பூசணி பயிரிடபட்டு 65 நாட்கள் முதல் 75 நாட்களில் அறுவடை பணி தொடங்கப்படுகிறது.
இதில் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 20ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவானதாகவும் இதில் 8 டன் முதல் 10 டன் வரை அறுவடை செய்வதாகவும் கடந்த ஆண்டு விடை இந்த ஆண்டு ஒரு மாதம் முன்பே வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் லாபம் கிடைக்கும் என விவசாயிகள் விவசாயி மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றனர்.