திருச்சி மாநகரில் மூன்று கடைகளுக்கு சீல்
திருச்சிராப்பள்ளி தென்னூர் ஹய் ரோடு பகுதியில் AV காபி பார், துரைசாமிபுரத்தில் உள்ள ஸ்ரீ நாகநாதர் டீ ஸ்டால் மற்றும் கிருஷ்ணாபுரம் ரோட்டில் உள்ள ஜோதி பீடா ஸ்டால் ஆகிய மூன்று கடைகளிலும் தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததால்
உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் R.லால்வேனா அவசர தடையாணை உத்தரவின் படியும், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் M.பிரதீப்குமார் அறிவுறுத்தலின் படியும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, பொன்ராஜ், ஸ்டாலின் மற்றும் வசந்தன், கொண்ட குழுவால் அந்த மூன்று கடைகளும் சீல் செய்யப்பட்டது.
மேலும், மாவட்ட நியமன அலுவலர் R.ரமேஷ்பாபு கூறுகையில்.... திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதோ அல்லது பதுக்கி வைப்பதோ போன்ற தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார். மேலும் அந்த நபர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் என்று கூறினார்.
இதுபோன்ற பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்களுக்கும் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision